ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'சைத்தான்' படத்தைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடித்த எமன் படம் வரும் 24ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. 'எமன்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று நடைபெற்று முடிந்துள்ள நிலையில், விஜய் ஆண்டனி நடிக்கவிருக்கும் அடுத்த படம் குறித்து விஜய் ஆண்டனி தரப்பில் விசாரித்தோம். அப்படம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. விஜய் ஆண்டனியின் அடுத்தப் படத்தை ராதிகா சரத்குமாரின் ராடான் மீடியா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தை அறிமுக இயக்குனர் சீனுவாசன் என்பவர் இயக்குகிறார்.
இந்தப்படத்திற்கு அண்ணாதுரை எனப் தலைபப்பு வைக்கப்பட்டிருப்பதாக தகவல் அடிபடுகிறது. திராவிடக்கட்சிகளின் முன்னோடியான புகழ்பெற்ற அரசியல் தலைவரான அண்ணாதுரையின் பெயரை படத்துக்கு தலைப்பாக சூட்ட இருப்பதால், படத்திலோ விஜய் ஆண்டனி ஏற்கும் கேரக்டரிலோ தப்பான விஷயங்கள் வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளனராம். குறிப்பாக, இது சம்மந்தமாக மிக கவனத்துடன் இருக்கிறாராம் விஜய் ஆண்டனி.
அதேசமயம், அண்ணாதுரை தலைப்பு எதிர்ப்பு வரலாம் என்று அச்சமும் விஜய் ஆண்டனிக்குள் இருக்கிறதாம். எனவே இதில் எந்த பிரச்னையும் வந்துவிடக்கூடாது என்பதற்காக முன்கூட்டிய திராவிட கட்சிகளின் தலைவர்களை சந்தித்து விஜய் ஆண்டனி பேச இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.