ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழில் சிலம்பாட்டம் உள்ளிட்ட சில படங்களில் நடித்த நடிகை சனாகான், பாலிவுட்டிலும் பிஸியான நடிகையாக இல்லாவிட்டாலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். நடிகர் அக்ஷ்ய் குமார், ஜாலி எல்எல்பி-2 படத்தை தொடர்ந்து ‛டாய்லட் ஏக் பிரேம் கதா' எனும் படத்தில் நடிக்கிறார். இந்தப்படத்தில் நடிகை சனா கானும் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளார். அதாவது அக்ஷ்ய் குமாரின் காதலியாக ஒரு சில காட்சிகளில் நடிக்கிறார்.
சனாகான் கெஸ்ட் ரோல் தான், அக்ஷ்ய் ஜோடியாக பூமி பதன்கர் நடிக்கிறார். ஸ்ரீ நாராயன் சிங் இயக்க, நீரஜ் பாண்டே தயாரிக்கிறார். கிராமத்தில் கழிப்பறை வசதிகளை பற்றி இப்படம் பேசப்போகிறது. ஒரு சமூக விழிப்புணர்வு படத்தை கொஞ்சம் காமெடி கலந்து சொல்ல உள்ளார் இயக்குகிறார். டாய்லட் ஏக் பிரேம் கதா படம் வருகிற ஜூன் 2-ம் தேதி ரிலீஸாக உள்ளது.