பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆனதில் இருந்தே முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்தவர் ஹன்சிகா. அதன்காரணமாக அவரது சம்பளமும் படத்துக்குப் படம் எகிறிக்கொண்டே சென்றது. ஆனால் ரோமியோ ஜூலியட் படத்தில் அழுத்தமான நாயகியாக நடித்தபோதும், அவரது மார்க்கெட் பின்னர் படிப்படியாக இறங்கத் தொடங்கியது. அதனால் தெலுங்கிற்கு இடம்பெயர்ந்த ஓரிரு படங்களை கைப்பற்றி நடிக்கத் தொடங்கிய ஹன்சிகா, தற்போது தமிழிலும் சில புதிய படங்களில் நடிக்கிறார்.
ஆனால், முன்பு மாதிரி மேல்தட்டு ஹீரோக்களின் படங்களாக இல்லாமல் வளர்ந்து கொண்டிருக்கும் விஷ்ணு விஷால், ஜி.வி.பிரகாஷ் போன்ற நடிகர் களுக்கு ஜோடியாக நடிக்க பேசி வருகிறார். மேலும், தன்னிடம் யாராவது கதை சொல்ல வேண்டுமென்றால் மும்பைக்கு வந்து கதை சொல்லுங்கள் என்று கூறி வந்த ஹன்சிகா, இந்த படங்கள் குறித்து பேசுவதற்காக சென்னை வந்து கதை கேட்டு பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். அதோடு, மார்க்கெட் இறங்கியிருப்பதால் தனது சம்பளத்தையும் அவர் கணிசமான அளவு குறைத்திருப்பதாக கூறப்படுகிறது.