டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கடந்த சில தினங்களுக்கு முன்புதான் சமந்தா, நாகசைதன்யா திருமண நிச்சயதார்த்த விழா ஐதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது. அப்போது புகழ்பெற்ற மும்பை டிசைனர் வடிவமைத்துக் கொடுத்த புடவையை அணிந்து அழகுமிளிர காட்சி கொடுத்தார் சமந்தா. அதோடு தொடர்ந்து படங்களிலும் நடித்து வரும் சமந்தா, தெலுங்கானாவின் கைத்தறி தூதராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் கைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் முயற்சியாக, கைத்தறி துணிகளை அதிகமாக மக்கள் பயன்படுத்த வேண்டும் என்று அம்மாநில அரசு சார்பில் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதோடு, கைத்தறி விற்பனையை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் நடிகை சமந்தாவை தெலுங்கானா மாநிலத்தின் கைத்தறி தூதராக நியமித்துள்ளனர். அதனால், விரைவில், அதுகுறித்த பிரச்சாரங்களை மாநிலம் முழுக்க நடத்தப் போகிறாராம் சமந்தா.