Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹன்சிகாவுடன் தொடர்ந்து நடிப்பது அலுப்பு தட்டவில்லை: ஜெயம் ரவி

02 பிப், 2017 - 04:22 IST
எழுத்தின் அளவு:
mutual-understanding-with-Hansika:-ravi

தனி ஒருவன் படத்துக்கு பின், தனியான ஒரு அடையாளம் கிடைத்தது ஜெயம் ரவிக்கு. மீண்டும் அரவிந்த் சாமி, ஹன்சிகாவுடன் இணைந்து, தற்போது போகன் படத்தில் அதிரடி காட்ட தயாராகியுள்ள, அவருடன் ஒரு சந்திப்பு:


போகன், எதைப் பற்றி பேசும் படம்?


போகன் என்றால், எல்லாவற்றுக்கும் ஆசைப்படுபவன் என்று பொருள். இதுவரை, நாம் பார்த்திராத, யோசித்திராத கதை என்றும் இதை சொல்லலாம். நிச்சயமாக, ரசிகர்கள் கைதட்டி ரசிக்கக் கூடிய ஒரு படமாக, இது இருக்கும்.


இதில் என்ன ஸ்பெஷல்?


படத்தின் திரைக்கதை தான் ஸ்பெஷல். இந்த மாதிரி படத்துக்கு சரியான திரைக்கதை அமைவது, சவாலான ஒரு விஷயமாகவே இருக்கும். இந்த படத்தில், ஒரு கேள்வியை கேட்டு, அதற்கு பதிலும் சொல்லியிருக்கிறோம்.


அரவிந்த் சாமி கேரக்டர் என்ன?


அவர், ராஜவம்சத்தைச் சேர்ந்த ஒரு நபராக நடிக்கிறார். நடிப்பில், பிரமாதப்படுத்திஉள்ளார். நாங்கள் இரண்டு பேருமே, ஒவ்வொரு காட்சியிலும் நடிப்பதற்கு முன், கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டோம்.


ஹன்சிகாவுடன் தொடர்ந்து நடிப்பது அலுப்பு தட்டவில்லையா?


உங்களுக்கு அலுப்பு தட்டாதவரை, எங்களுக்கும் தட்டாது. எங்கள் ஜோடி, வெற்றிகரமான ஜோடியாக, ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதனால், மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளோம். இதில், ஹன்சிகாவின் மிகச் சிறந்த நடிப்பை, நீங்கள் பார்க்கலாம். இந்த படத்துக்கு, ஹன்சிகாவை தவிர, வேறு யாரையும் நினைத்து பார்க்க முடியாது.


புதிய இயக்குனர்களின் படங்களில் நடிப்பதற்கு தயக்கமாக இருக்கிறதா?


நிச்சயமாக இல்லை; நானும், ஒரு காலத்தில் புதுமுகமாக வந்தவன்தானே. இதனால், புதுமுக இயக்குனர்களுக்கு எப்போதுமே என் ஆதரவு உண்டு. பூலோகம், ரோமியோ ஜூலியட் படங்களின் இயக்குனர்கள் புதுமுகங்கள் தான்.


இயக்குனராக போவதாக கூறினீர்களே?


கூடிய விரைவில் இயக்குனராக ஆசை தான். ஆனால், அடுத்த இரு ஆண்டுகளுக்கு கமிட்மென்ட் இருக்கு. இயக்குனராவது, அவ்வளவு சுலபமான வேலையில்லை. எந்த டென்ஷனும் இல்லாமல், நிம்மதியாக பார்த்தால் தான், இயக்குனராக ஜொலிக்க முடியும்.


போகன் படத்திற்கன உங்கள் மெனக்கெடல்?


அசிஸ்டென்ட் கமிஷனராக நடிக்கிறேன். நான் இதுவரை நடித்த படங்களில் இருந்து, முற்றிலும் மாறுபட்ட படமாக இது இருக்கும். முதல் பாதியில், என் தோற்றம், உடை, வசனங்கள் ஒரு மாதிரியாகவும், இரண்டாம் பாதியில் வேறு மாதிரியாகவும் இருக்கும். இதற்காக, ரொம்ப சிரமப்பட்டேன்.


சினிமா நண்பர்கள் யாருடன் சேர்ந்து நடிக்க ஆசை?


அனைவருடனும் நடிக்க ஆசைப்படுகிறேன். ஆர்யாவுடன், சங்கமித்ரா படத்தில் நடிக்கிறேன். சரியான கதை அமைந்தால், யாருடன் வேண்டுமானாலும் நடிக்க தயாராக இருக்கிறேன்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in