Advertisement

சிறப்புச்செய்திகள்

அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

திரில்லர் பாணியில் உருவாகியுள்ள கிரகணம்

01 பிப், 2017 - 17:08 IST
எழுத்தின் அளவு:
Graghanam-movie-made-in-Thriller-type

பிக் பிரிண்ட் பிச்சர்ஸ் சார்பில் ஐபி.கார்த்திகேயன் மற்றும் கேஆர்.பிலிம்ஸ் சார்பில் சரவணன் இணைந்து தயாரித்து இருக்கும் திரைப்படம் கிரகணம். அறிமுக இயக்குநர் இளன் இயக்கி இருக்கும் இந்த கிரகணம் படத்தின் முதல் போஸ்டர் ரசிகர்கள் மத்தியிலும், சினிமா விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் பாராட்டுகளை பெற்றுள்ளது. இயக்குநர் இளன் அடிப்படையில் ஒரு குறும்பட இயக்குநர். இவருடைய வி - சித்திரம் குறும்படம் ரசிகர்களிடத்தில் பெரும் பாராட்டுகளை பெற்றது மட்டுமின்றி, லடாக் சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிட தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.


கிருஷ்ணா - கயல் சந்திரன் என இரண்டு கதாநாயகர்களை உள்ளடக்கி இருக்கும் கிரகணம் திரைப்படத்தில் கருணாகரன், கருணாஸ், ஜெயபிரகாஷ் மற்றும் பிளாக் பாண்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. புதுமுகம் நந்தினி ராய் இந்த கிரகணம் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். அதுமட்டுமின்றி, ஒளிப்பதிவாளர் சரவணன், இசையமைப்பாளர் சுந்திரமூர்த்தி மற்றும் படத்தொகுப்பாளர் மணி குமரன் என பல திறமையான தொழில் நுட்ப கலைஞர்களை கிரகணம் திரைப்படம் உள்ளடக்கி இருப்பது மேலும் சிறப்பு.


"என்னுடைய வி - சித்திரம் குறும்படத்திற்கு ரசிகர்கள் அளித்த அமோக வரவேற்பை தொடர்ந்து நான் உருவாக்கி இருக்கும் முதல் முழு நீள திரைப்படம் கிரகணம். இரண்டு வெவ்வேறு சம்பவங்கள் மூலம் எப்படி படத்தின் கதாபாத்திரங்களுக்குள் தொடர்பு ஏற்படுகின்றது என்பது தான் கிரகணம் படத்தின் ஒரு வரி கதை. முழுக்க முழுக்க திரில்லர் பாணியில் கிரகணம் படம் உருவாகி இருந்தாலும், ரசிகர்களை உற்சாகப்படுத்த கூடிய எல்லா சிறப்பம்சங்களையும் நாங்கள் இந்த படத்தில் உள்ளடக்கி இருக்கின்றோம். எனக்கு முழு சுதந்திரத்தையும், ஆதரவையும் வழங்கிய என்னுடைய தயாரிப்பாளர்கள் ஐ பி கார்த்திகேயன் அவர்களுக்கும், சரவணன் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்" என்று உற்சாகமாக கூறுகிறார் கிரகணம் படத்தின் இயக்குநர் இளன்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in