ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஜெயம்ரவி நடித்த போகன் படம் நாளை வெளியாகவிருக்கிறது. அரவிந்த்சாமி, ஹன்சிகா என தெரிந்த முகங்கள் நடித்திருந்தாலும் ஆரம்பத்திலிருந்தே போகன் படத்தைப் பற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. என் கதையைத் திருடித்தான் போகன் படத்தை எடுத்திருக்கிறார்கள் என்று ஒரு உதவி இயக்குநர் குற்றம் சாட்டினார். அவருடைய குற்றச்சாட்டில் நியாயம் இருப்பதை உறுதி செய்து கொண்ட இயக்குநர்கள் சங்கம், அவருக்கு போகன் பட தயாரிப்பாளரிடம் இருந்து 20 லட்சம் பணம் வாங்கித்தருவதாக பேரம் பேசியது. அதை அந்த உதவி இயக்குநர் ஏற்கவில்லை.
இதுப்போன்று பல பிரச்னைகள் எல்லாம் தீர்ந்து ஒருவழியாக நாளை படம் ரிலீஸாக இருக்கிறது. இதனிடையே தலக்கோணத்தில் படப்பிடிப்பில் இருந்த ஜெயம்ரவி, படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு போகன் படத்தின் புரமோஷனுக்காக சென்னை வந்துள்ளார். இந்திய சினிமா வரலாற்றிலேயே படத்தின் ரிலீஸுக்கு முதல்நாள் பிரஸ்மீட் வைத்த படம் என்ற போகன் படத்துக்கு கிடைத்திருக்கிறது.