ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் |
'இஞ்சி இடுப்பழகி' படத்தின் கதாபாத்திரத்திற்காக நிஜமாகவே தன்னுடைய உடம்பை குண்டாக்கிய அனுஷ்கா, அதன் பின் அந்த உடலை இளைக்க வைக்க மிகவும் கஷ்டப்பட்டார். ஆனால், முன்பைப் போல அவரால் உடலை இளைக்க வைக்க முடியாமல் போனது. அதனால், 'பாகுபலி 2' படத்தின் படப்பிடிப்பு தள்ளிக் கொண்டே போனது. ஒரு கட்டத்தில் அதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியாமல், குண்டாக இருந்தாலும் பரவாயில்லை என அனுஷ்கா சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க ஆரம்பித்தார்களாம்.
கடந்த வாரம் 'பாகுபலி 2' படத்தில் அனுஷ்காவின் தோற்றத்துடன் கூடிய போஸ்டர் வெளியானது. அந்த போஸ்டரில் மிகவும் ஸ்லிம்மான அனுஷ்காவின் தோற்றத்தைப் பார்த்து அனைவரும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள். குண்டாக இருந்த அனுஷ்கா எப்படி இவ்வளவு அழகான உடல் வளைவுகளுடன் இருக்கிறார் என சமூக வலைத்தளங்களில் பல மீம்ஸ்கள் வெளியானது.
“குறைந்த காலத்தில் எப்படி ஒல்லியாவது ?, 'கோ டிஜிட்டல்' என்ற ரீதியில் பல மீம்ஸ்களை வலைதளவாதிகள் தட்டிவிட்டுள்ளனர். ஆனால், அவற்றிற்கெல்லாம் அனுஷ்கா அசரவில்லை. வழக்கம் போலவே அமைதியாக இருக்கிறார். 'பாகுபலி 2' படத்தின் விஎப்எக்ஸ் வேலைகளில் அனுஷ்வின் உடல் வடிமைப்பும் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கும் என டோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்களாம்.