'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
தமிழில் ஏமாற்றம் கிடைத்த ரெஜினாவிற்கு டோலிவுட் அடைக்கலம் கொடுத்துள்ளது. தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையாக ஜொலிக்க நடனத்திறமை வேண்டும் என்பது எழுதப்படாத விதி. டோலிவுட்டில் 80, 90களில் முன்னணி நடிகர்களான சிரஞ்சீவி, நாகார்ஜூனா, வெங்கடேஷ் என அனைவரும் தேர்ந்த நடன கலைஞர்கள். அவர்களை பின்பற்றி அடுத்த தலைமுறை நடிகர்களான ராம் சரண், அல்லு அர்ஜூன், ஜூனியர் என்.டி.ஆர் என இளம் நடிகர்கள் பலரும் நடன சூராவளிகள் என பெயரெடுத்துள்ளனர்.
அந்த வகையில் நடிகைகளும் அவர்களுக்கு இணையாக நிலைத்து நிற்க நடன திறமை வேண்டும். இதனை புரிந்து கொண்ட ரெஜினா முறைப்படி நடனம் கற்றுக்கொண்டாலும் தனது நடன திறமையை வெளிப்படுத்த சரியான கதாபாத்திரம் கிடைக்கவில்லை என வருத்தப்பட்டிருக்கின்றார். அவரது வருத்தத்தை போக்கும் வண்ணம், இயக்குனர் கிருஷ்ண வம்சி இயக்கும் நக்ஷத்ரா படத்தில், நடன கலைஞராக நடிக்கும் வாய்ப்பு ரெஜினாவிற்கு கிடைத்துள்ளது.சந்தீப் கிஷான் நாயகனாக நடிக்கும் நக்ஷத்ரா படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் ரெஜினா இப்படத்தின் வாயிலாக தனது நடனத்திறமை அனைவருக்கும் தெரியவரும் என பெருமைப்படுகின்றார்.