வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
ரஜினிமுருகன், ரெமோ, பைரவா படங்களுக்குப்பிறகு சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் என்ற ஒரேயொரு தமிழ்ப்படத்தில் மட்டுமே நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். ஆனால் தெலுங்கில் நானியுடன் நீனு லோக்கல் படத்தில் நடித்து விட்டவர், அடுத்தபடியாக பவன் கல்யாணுடன் நடிக்க தயாராகிக்கொண்டிருப்பவர், ஜூனியர் என்டிஆருடன் நடிப்பதற்கும் ஒரு கதையை ஓகே பண்ணி வைத்திருக்கிறாராம்.
மேலும், விஜய்யுடன் நடித்த பைரவாவில் கீர்த்தி சுரேஷின் பர்பாமென்ஸ் பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை என்கிற ஒரு தகவலும் கீர்த்தி சுரேஷின் காதுகளை எட்டியுள்ளதாம். அதனால் அடுத்தடுத்த படங்களில் அதிரடியான பர்பாமென்ஸ் கொடுத்து ரசிகர்களை கவர வேண்டும் என்பதற்கான முயற்சிகளில் தீவிரமடைந்துள்ளார் கீர்த்தி சுரேஷ். அதன்காரணமாக, முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளில் நடிப்பதற்கு முன்பாக தனது தாய்குலத்தின் முன்னிலையில் கேரவனுக்குள்ளேயே ரிகர்சல் பார்த்து விட்டு களமிறங்கும் கீர்த்தி சுரேஷ், ஓரளவு கிளாமர் காட்டும் அசத்தலான காஸ்டியூம்களையும் அணிந்து நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.