தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரபுசாலமனின் கயல் படத்தில் நடித்தவர் ஆனந்தி. தெலுங்கு நடிகையான இவர் அதன்பிறகு முழுநேர தமிழ் நடிகையாகி விட்டார். சண்டிவீரன், திரிஷா இல்லன்னா நயன்தாரா, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு ஆகிய படங்களில் நடித்தவர் தற்போது விமலுடன் மன்னார் வகையறா, பண்டிகை, ரூபா உள்பட சில படங்களில் நடித்து வருகிறார்.
மேலும், புதிய படங்களுக்காக ஆனந்தியிடம் கதை சொல்ல சென்ற சில டைரக்டர்கள், தமிழ்நாட்டு ரசிகர்கள் ஹன்சிகா மாதிரி குண்டு நடிகை களுக்குத்தான் வரவேற்பு கொடுப்பார்கள் என்று சொல்லி அவரை வெயிட் போடுமாறு கேட்டுக்கொண்டார்களாம். அதையடுத்து, ஜி.வி.பிரகாசுடன் நடித்த கடவுள் இருக்கான் குமாரு படத்திற்காக ஓரளவு வெயிட் போட்ட ஆனந்தி, தற்போது இன்னும் சற்று வெயிட் போடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாராம். அதனால், வரப்போகிற படங்களில் கயல் ஆனந்தியை ஓரளவு குண்டு நடிகையாக பார்த்து ரசிக்கலாம் என்கிறார்கள்.