இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
காமெடி நடிகராக அறிமுகமான சந்தானத்திற்கு நல்ல முகவரியை தேடிக் கொடுத்தவர் ராஜேஷ்.எம். அவர் இயக்கிய சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க ஆகிய படங்களில் ஹீரோக்கள் தனிதனியாக இருந்தாலும் காமெடியன் சந்தானம்தான். ராஜேஷ் கடைசியா இயக்கிய கடவுள் இருக்கான் குமாரு படத்தில் மட்டும் சந்தானம் இல்லை. அதற்கு காரணம் சந்தானம் தற்போது ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
"இனி சந்தானத்தை வைத்து படம் இயக்கினால் ஹீரோவகாத்தான் இயக்குவேன். எனக்கும், அவருக்கும் இருக்கிற நட்பை பயன்படுத்தி காமெடியனாக மட்டும் நடிக்க வைக்க மாட்டேன்" என்று ராஜேஷ் கூயிருந்தார். அதன்படி ராஜேஷ் அடுத்து இயக்கப்போகும் படத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் என்.முரளி ராமசாமி தயாரிக்கிறார். மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. ஆனந்தி அல்லது நிக்கி கல்ராணி ஹீரோயினாக நடிப்பார்கள் என்று தெரிகிறது.