வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
நடிகர் விஷ்ணு விஷால் - ரஜினி நட்ராஜ் தம்பயதியருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். தொடர்ந்து பல படங்களில் நடித்து சொந்தமாக படம் தயாரிக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார். தற்போது கதாநாயகன், சிண்ட்ரலா போன்ற படங்களில் தற்போது விஷ்ணு நடித்து வருகிறார்.
விஷ்ணு விஷாலும், நடிகர் நட்ராஜின் மகள் ரஜினி நட்ராஜூம் கல்லூரி படிக்கும் காலத்தில் இருந்தே காதலித்து வந்தனர். கடந்த 2011-ம் ஆண்டு இவர்களது திருமணம் நடந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரஜினி நட்ராஜ் கர்ப்பமானார். ரஜினிக்கு பிரசவ வலி ஏற்பட சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று(ஜன., 31-ம் தேதி) அதிகாலை அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதை தனது டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார் விஷ்ணு. அத்துடன் தனது குழந்தையுடன் எடுத்த போட்டோவையும் அவர் பதிவிட்டிருக்கிறார்.