மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
நார்த் அமெரிக்கா பிலிம் அவார்ட்ஸ் (NAFA) என்கிற விருதுகள் வருடந்தோறும் வெளியாகின்ற சிறந்த மலையாள சினிமாவுக்கும், அதில் பங்குபெற்ற சிறந்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன.. இந்த விருதுகளுக்கான வெற்றியாளர்களை வட அமெரிக்காவில் வசிக்கும் மலையாளிகள் ஆன்லைன் சர்வே மூலமாக ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கிறார்கள். அந்தவகையில் இந்த வருட விருதிற்கான நபர்களை தேர்ந்தெடுத்தும் விட்டார்கள்..
விழா நடக்க இன்னும் ஆறு மாதங்கள் இருக்கும் நிலையில் இப்போதே விருதுபெற்றவர்கள் பட்டியலையும் அறிவித்துவிட்டார்கள்.. காரணம் விருது வழங்கும் விழாவில் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளவேண்டும் என்பதால் விசா பிரச்சனை மற்றும் மற்ற படங்களின் கால்ஷீட் பிரச்சனை ஆகியவற்றை முன்கூட்டியே சரிசெய்து கொள்வதற்காகத்தான் இந்த கால அவகாசமாம். விருதுபெற்றவர்களின் விபரம் பின் வருமாறு ;
சிறந்த படம் ; மகேஷிண்டே பிரதிகாரம்
சிறந்த இயக்குனர் ; ராஜீவ் ரவி (கம்மட்டிப்பாடம்)
சிறந்த நடிகர் ; நிவின்பாலி (ஜேக்கப்பிண்டே சுவர்க்க ராஜ்யம் & ஆக்சன் ஹீரோ பிஜூ)
சிறந்த நடிகை ; மஞ்சு வாரியார் (கரிங்குன்னம் சிக்சஸ் & வேட்ட)
சிறந்த சமூகநோக்கிலான படம் ; கொச்சவ்வா பவுலோ ஐயப்பா கொய்லோ
சிறந்த திரைக்கதை ; ஷியாம் புஷ்கரன் (மகேஷிண்டே பிரதிகாரம்)
சிறந்த இசையமைப்பாளர் ; பிஜிபால் (மகேஷிண்டே பிரதிகாரம்)
சிறந்த பின்னணி பாடகர் ; உன்னிமேனன்(ஜேக்கப்பிண்டே சுவர்க்கராஜ்யம்)
சிறந்த பின்னணி பாடகி ; வாணி ஜெயராம் (ஆக்சன் ஹீரோ பிஜூ)
சிறந்த ஒளிப்பதிவாளர் ; ஷிஜு கலியத் (மகேஷிண்டே பிரதிகாரம்)
சிறந்த துணை நடிகர் ; ரெஞ்சி பணிக்கர் (ஜேக்கப்பிண்டே சுவர்க்க ராஜ்யம்)
சிறந்த துணை நடிகை ; ஆஷா சரத் (பாவாட, அனுராக கரிக்கின் வெள்ளம்)
சிறந்த பாப்புலர் படம் ; அப்ரிட் ஷைன் ( ஆக்சன் ஹீரோ பிஜூ)
சிறந்த அறிமுக இயக்குனர் ; திலீஷ் போத்தன் (மகேஷிண்டே பிரதிகாரம்)
சிறந்த குணச்சித்திர நடிகர் ; ஜோஜு ஜார்ஜ் (ஆக்சன் ஹீரோ பிஜூ & 10 கல்பனைகள்)
சிறந்த வில்லன் ; செம்பான் வினோத் (கலி)
சிறந்த பொழுதுபோக்கு நட்சத்திரம் ; அஜூ வர்கீஸ்
சிறந்த நகைச்சுவை நடிகர் ; சௌபின் சாஹிர்
சிறந்த சென்சேஷனல் நடிகர் ; டொவினோ தாமஸ் (குப்பி)
சிறந்த சென்சேஷனல் நடிகை ; அபர்ணா பாலமுரளி (மகேஷிண்டே பிரதிகாரம்)
மிகச்சிறந்த நடிப்பு ; விநாயகன் (கம்மட்டிப்பாடம்)
சிறப்பு விருது ; வினய்போர்ட், நீரஜ் மாதவ்