ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மலையாளத்தில் தற்போது திலீப் நடித்துவரும் 'ராம்லீலா' படம் முழுக்க முழுக்க அரசியல் களத்தை பின்னணியாக கொண்டு உருவாக்கி வருகிறது.. இதற்கு முன் 'லயன்' என்கிற படத்தில் அரசியல்வாதியாக நடித்திருந்த திலீப் நீண்ட நாளைக்குப்பின் அரசியல்வாதி கேரக்டரில் நடித்து வருகிறார்.. படத்தில் அவருக்கு எம்.எல்.ஏ கேரக்டர்.. ஆச்சர்யமாக இந்தப்படத்தில் அவரது அம்மா கேரக்டரும் அரசியல் களத்தில் பம்பரமாக சுற்றுபவராக வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த அம்மா கேரக்டரில் நடிக்கிறார் ராதிகா. தான் கதாநாயகியாக கொடிகட்டி பரந்த காலத்தில் மலையாளத்தில் நடித்த ராதிகா சுமார் 24 வருடங்களுக்குப்பின் மலையாள திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார்.
நேரடி அரசியலில் இறங்காமல் தனது பகுதி மக்களுக்காக குரல் கொடுப்பவராகவும், பொதுப்பிரச்சனை என்றால் முதல் ஆளாக நிற்பவராகவும் ராதிகாவின் கேரக்டர் உருவாக்கப்பட்டுள்ளதாம். அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கும் ராதிகா, ஒருகட்டத்தில் அரசியல்வாதியான தனது மகனுடனேயே மோதுவது போல திரைக்கதை சுவாரஸ்யமாக அமைக்கப்பட்டுள்ளதாம். பிருத்விராஜின் ஹிட் படமான 'அனார்கலி' படத்தை இயக்கிய சாச்சி தான் இந்தப்படத்தின் ஸ்கிரிப்ட்டை எழுதியுள்ளார். அருண் கோபி என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார்.