பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இயக்குநர் சஞ்சய் குப்தா இயக்கத்தில், ஹிருத்திக் ரோஷன், யாமி கவுதம் நடித்து கடந்தவாரம் வெளியான படம் ‛காபில்'. இப்படத்துடன் ராகுல் தொலாக்கிய இயக்கத்தில், ஷாரூக்கான், மகிரா கான் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‛ரயீஸ்'. வெவ்வேறு கதைக்களத்தை கொண்ட இந்த இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்றுள்ளது. ஒருவார முடிவில் ‛ரயீஸ்' படம் ரூ.75.44 கோடியும், காபில் படம் ரூ.52.41 கோடியும் வசூலித்து இருக்கிறது.
‛ரயீஸ்' படம் வெளியான முதல் நாளில் ரூ. 20 கோடியும், வியாழக்கிழமை ரூ. 26.30 கோடியும், வெள்ளிகிழமை ரூ. 13 கோடியும், சனிக்கிழமை ரூ15.16 கோடியும் ஆகமொத்தம் ரூ.75.44 கோடி வசூலித்து இருக்கிறது. ‛காபில்' படம் முதல் நாளில் ரூ 10.43 கோடியும், இரண்டாவது நாளில் ரூ 18.67 கோடியும், வெள்ளிகிழமை அன்று ரூ.9.77 கோடியும், சனிக்கிழமை அன்று ரூ.13.34 கோடியும் என ரூ.52.41 கோடி வசூலித்து இருக்கிறது. இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூலை குவித்து வருகிறது.