மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
விசாரணை படத்தை அடுத்து வெற்றிமாறன்-தனுஷ் தயாரிப்பில் அட்டகத்தி தினேஷ் நடித்து வரும் படம் அண்ணனுக்கு ஜே. அவருக்கு ஜோடியாக சாட்டை மகிமா நம்பியார் நடிக்க, ஆர்.ஜே.பாலாஜி, ராதாரவி, மயில்சாமி உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தை ராஜ்குமார் இயக்குகிறார். மேலும், இதுவரை காதல், காமெடி, ஆக்சன் கதைகளில் நடித்துள்ள தினேஷ், விசாரணையில் மாறுபட்ட அழுத்தமான வேடத்தில் நடித்திருந்தார்.
அதையடுத்து இப்போது இந்த அண்ணனுக்கு ஜே படத்தில் முதன்முறையாக அரசியல் கதையில் நடித்துள்ளார். முக்கியமாக வாக்களித்த பிறகு மக்கள் பக்கம் திரும்பியே பார்க்காத ஒரு அரசியல்வாதிக்கு எதிராக தேர்தலை சந்திக்கும் வேடத்தில் நடிக்கிறாராம். அதனால் இந்த படத்தில் காதர் வேட்டி சட்டை அணிந்து பக்கா அரசியல்வாதியாகவே மாறியுள்ள தினேஷ், நிகழ்கால அரசியல் குறித்தும் ஆங்காங்கே அட்டாக் செய்திருக்கிறாராம். ஆக, இந்த படம் அட்டகத்தி தினேசுக்கு ஒரு முக்கியமான படமாக இருக்கும் என்கிறார்கள்.