அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
நடிகர் கமலஹாசன் மற்றும் அவரது மகள்கள் ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன் ஆகியோர் ஏற்கெனவே உடல்தானம் செய்துள்ளனர். இந்த நிலையில் கமல் குடும்பத்தைச் சேர்ந்த சுஹாசினியும், அவரது கணவரும், இயக்குனருமான மணிரத்னம் ஆகியோரும் உடல்தானம் செய்தனார்.
சென்னையில் நேற்று சாகா அறக்கட்டளை சார்பில் சாகாவரம் என்ற இசை நிகழ்ச்சி நடந்தது. இசை அமைப்பாளர் பரத்வாஜ் இதனை நடத்தினார். ஏஸ் வென்சர்ஸ் நிறுவனமும் இணைந்து இதனை நடத்தியது. இதில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நடிகை சுஹாசினி, தானும் தனது கணவர் மணிரத்தினமும், தந்தை சாருஹாசனும், தாய் கோமளாவும் உடல் தானம் செய்வதாக அறிவித்தார். இந்த விழாவில நடிகர்கள் பிரசன்னா, சாந்தனு பாக்யராஜ், நடிகைகள் சினேகா, லட்சுமி ராமகிருஷ்ணன், இயக்குனர்கள் பார்த்திபன், வசந்த் சாய், சரண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.