சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் |
1976ம் ஆண்டு வெளிவந்த படம் பத்ரகாளி. இதில் சிவகுமார், ராணிசந்திரா, மேஜர் சுந்தர்ராஜன், தேங்காய் சீனிவாசன், எஸ்.ஆர்.சிவகாமி நடித்திருந்தனர். சினி பாரத் நிறுவனம் சார்பில் டி.பாரதி தயாரித்தார். ஆரூர் தாஸ் திரைக்கதை வசனம் எழுதியிருந்தார். இளையராஜா இசை அமைத்திருந்தார். ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கி இருந்தார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் 60 சதவிகிதம் முடிந்திருந்த நிலையில் இதில் ஹீரோயினாக நடித்து வந்த ராணிசந்திரா விமான விபத்தில் மரணம் அடைந்தார். மலையாளத்தில் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த ராணிசந்திரா, தமிழில் சுவாமி அய்யப்பன், தேன் சிந்துதே வானம், ராதா என்ற படங்களில் நடித்தார். பத்ரகாளி கடைசி படம்.
பத்ரகாளி படத்தை இயக்கிய ஏ.சி.திருலோகச்சந்தர் படத்தை எப்படியாவது முடிக்க வேண்டுமே என்று கருதி அப்போது சினிமாவில் நடனமாடிக் கொண்டிருந்த நடன மங்கைகளை அழைத்தார் அதில் ஓரளவுக்கு ராணிசந்திராவின் முகத் தோற்றத்தில் இருந்த புஷ்பா என்கிற நடன மங்கையை தேர்வு செய்து அவரை நடிக்க வைத்து படத்தை முடித்தார். லாங் ஷாட் (தொலைவு காட்சி) பேக் ஷாட் (பின்புற காட்சி) ஷேடோ ஷாட் (நிழல் காட்சி) ஆகிய காட்சி அமைப்புகளை பயன்படுத்தி சமாளித்தார். படம் வெளிவந்து வெள்ளி விழா கொண்டாடிய பிறகுதான் ராணி சந்திராவுக்கு பதில் குரூப் டான்சர் புஷ்பா நடித்த விபரத்தை வெளியில் சொன்னார்.