Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக்: ஜெயலலிதாவிற்கு மாநில விருது பெற்ற தந்த ‛யாருக்கும் வெட்கமில்லை'

27 ஜன, 2017 - 10:30 IST
எழுத்தின் அளவு:
Jayalalithas-Yarukkum-Vetkam-Illai

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அந்தக் காலத்து கமர்ஷியல் ஹீரோயின். அவர் நடித்த படங்களில் 50 சதவிகிதம் வெள்ளி விழா படங்கள். பெரும்பாலான படங்கள் 100 நாள் படங்கள். அவர் அளவிற்கு வெற்றிகளை குவித்தவர் இல்லை. பெரும்பாலான படங்களில் தெனாவெட்டான பணக்கார பெண்ணாக நடித்துள்ளார்.


ஆனால் அவரும் வாழ்வின் கடைநிலை பெண்களை சித்திரிக்கும் படங்களிலும் நடித்திருக்கிறார். அவற்றில் ஒன்று யாருக்கும் வெட்கமில்லை. இதில் அவர் பாலியில் தொழிலாளியாக நடித்தார். ஒரு பெண் எப்படி பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படுகிறாள். அவளை இந்த சமூகம் எப்படி பார்க்கிறது. அதிலிருந்து மீண்டு வர அவள் எப்படி போராடுகிறாள் என்பதுதான் கதை.


சோ எழுதி நடத்தி வந்த ரன் அவே ஹிட் நாடகம்தான் யாருக்கும் வெட்கமில்லை என்ற பெயரில் சினிமாவானது. நாடகத்தில் சுகுமாரி நடித்த கேரக்டரில் ஜெயலலிதா நடித்தார். ஜெயலலிதாவுக்கு அடைக்கலம் கொடுக்கும் முஸ்லிம் பெரியவர் வேடத்தில் சோவும், ஜெயலலிதாவுக்காக வாதாடும் வழக்கறிஞராக சிவகுமாரும் நடித்தனர். 1975ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தை சோ இயக்கினார். ஜி.கே.வெங்கடேஷ் இசை அமைத்திருந்தார். சிறந்த நடிகைக்கான மாநில விருது ஜெயலலிதாவுக்கு கிடைத்தது. ஜெயலலிதாவின் சினிமா கேரியரில் முக்கியமான படம் யாருக்கும் வெட்கமில்லை.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in