'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நயன்தாரா, தமன்னா, ஹன்சிகா போன்ற நடிகைகள் தங்களது கவர்ச்சியை வெளிப்படுத்திதான் மார்க்கெட்டை பிடித்தனர். ஆனால், சிவகார்த்திகேயனுடன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த ஸ்ரீதிவ்யாவோ, பாவாடை தாவணி கெட்டப்பில் நடித்து பெருவாரியான ரசிகர்களை கவர்ந்திழுத்தார். தொடர்ந்து ஜீவா, வெள்ளக்காரதுரை, காக்கி சட்டை, ஈட்டி, மருது, காஷ்மோரா, மாவீரன் கிட்டு என பல படங்களில் நடித்த ஸ்ரீதிவ்யாவின் மார்க்கெட் தற்போது தள்ளாடிக்கொண்டிருக்கிறது.
அவரது கைவசம் ஜீவா நடிக்கும் சங்கிலி புங்கிலி கதவ தொற படம் மட்டுமே உள்ளது. அவர் அதிகமாக எதிர்பார்த்த மாவீரன் கிட்டு படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறாததால் அடுத்தபடியாக அவரை புக் பண்ணவும் ஆளில்லை. அதனால், தனது தாய்மொழியான தெலுங்கு சினிமா கதவுகளை தட்டிவந்த ஸ்ரீதிவ்யாவுக்கு சிலர் கதவு திறந்திருக்கிறார்களாம். ஆனால், கிளாமர் ஹீரோயின் வாய்ப்பு கொடுத்துள்ளார்களாம்.
அதனால் இதுவரை தனக்கு கிளாமர் செட்டாகாது என்று ஓரங்கட்டி நின்று கொண்டிருந்த ஸ்ரீதிவ்யா, இப்போது கவர்ச்சி அவதாரம் எடுக்க தயாராகி விட்டார். மேலும், தனது மாற்று அவதாரம் குறித்து கோலிவுட்டிலுள்ள சில கமர்சியல் பட டைரக்டர்களிடமும் தெரிவித்து வரும் ஸ்ரீதிவ்யா, கவர்ச்சியாக நடிக்கிறேன் என்பதற்காக ஆபாச நடிகையாக்கி விடாதீர்கள் என்ற தனது வேண்டுகோளையும் முன்வைத்து வருகிறார்.