ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தயாரிப்பாளர் வருண்மணியனுக்கும், நடிகை த்ரிஷாவுக்கும் திருமணம் நடை பெறுவதாக முடிவு செய்யப்பட்டு நிச்சயதார்த்தமும் நடத்தினர். ஆனால் கல்யாண தேதி விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில் அவர்களின் பிரிவு செய்திதான் வெளியானது. அதற்கான காரணத்தை அப்போது இரண்டுபேருமே வெளிப்படையாக சொல்லவில்லை. பின்னர், திருமணத்திற்கு பிறகு நடிக்கக்கூடாது என்று கண்டிசன் போட்டனர். அதன்காரணமாகவே வெளியேறி விட்டேன் என்று த்ரிஷா கூறி வந்தார்.
இந்த நிலையில், அந்த சம்பவம் நடந்து முடிந்து ஓராண்டிற்கு பிறகு தற்போது இன்னொரு நடிகையுடன் வருண்மணியன் நெருங்கி பழகி வருவதாக செய்திகள் பரவியுள்ளன. கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, ஜாக்சன் துரை உள்பட பல படங்களில் நடித்த பிந்து மாதவிதான் அந்த நடிகை.
இவர்கள் இருவரும் ஜாலி டூர் அடித்த புகைப்படங்களை தனது இணைய பக்கத்திலேயே வெளியிட்டிருந்தார் பிந்து மாதவி. பின்னர் அதை நீக்கி விட்டார் என்றாலும், அவர் பதிவேற்றம் செய்திருந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது.