ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விவேக் ஓபராய் பாலிவுட்டில் முதன்முதலில் ஹீரோவாக அறிமுகமான படம் 'கம்பெனி'.. ராம்கோபால் வர்மா டைரக்சனில் உருவான இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் மோகன்லாலும் நடித்திருந்தார்.. தனது அறிமுகப்படத்திலேயே ஒரு சூப்பர்ஸ்டாருடன் நடிக்கும் பாக்கியம் பெற்றதாக கருதிய விவேக் ஓபராய், அதன்பின் மோகன்லால் நடித்த மலையாள படங்களை தேடிப்பார்க்க ஆரம்பித்ததுடன் அவரது ரசிகராகவும் மாறிவிட்டார்.. இத்தனை வருடங்கள் கழித்து தற்போது மலையாளத்தில் ஒரு படத்தில் நடிக்கவேண்டும் என்றும் அதுவும் மோகன்லாலுடன் இணைந்து நடிக்கவேண்டும் என்றும் தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார் விவேக் ஓபராய்.
காரணம் மோகன்லால் நடித்த படத்தில் அறிமுகமான ராசிதான் பாலிவுட்டில் இன்று தன்னை இந்த நிலையில் கொண்டுவந்து வைத்துள்ளதாக கருதும் விவேக் ஓபராய் அதேபோல் மலையாளத்திலும் தனது அறிமுகம் மோகன்லால் படம் மூலமாகவே நிகழவேண்டும் என நினைக்கிறாராம். மலையாள சினிமா நூறு கோடிகளை தாண்டி வசூலிக்கும் அளவுக்கு நன்கு வளர்ந்து வருவதையும் அதன் முக்கிய காரணகர்த்தாவாக மோகன்லால் இருப்பதையும் குறிப்பிட்டுள்ள விவேக் ஓபராய், விரைவில் மோகன்லால் நடித்துள்ள 'புலி முருகன்' படத்தை பார்க்க இருப்பதாக கூறியுள்ளாராம்.