ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளான தீபிகாவும், பிரியங்காவும் ஹாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்துவிட்டனர். இவர்கள் இருவரும் ஹாலிவுட்டில் அடியெடுத்து வைத்ததிலிருந்தே இருவரையும் ஒப்பிட்டு பேசும் செய்திகள் அதிகம் வெளிவர துவங்கிவிட்டன. சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்த தீபிகா, அங்கு நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தன்னை பிரியங்காவுடன் ஒப்பிட வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.
இதுப்பற்றி அவர் மேலும் கூறியிருப்பதாவது... ‛‛என்னையும், பிரியங்காவையும் ஒப்பிடுவது சரியல்ல. நான் என்னுடைய பாதையில் சென்று கொண்டிருக்கிறேன். அவர் வேறு ஒரு பாதையில் சென்று கொண்டிருக்கிறார், ஆகையால் இருவரையும் ஒப்பிட வேண்டாம்'' என்று கூறியுள்ளார்.