ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
காதலாகி படத்தின் மூலம் அறிமுகமானவர் சிருஷ்டி டாங்கே. தமிழ் சினிமாவின் ஒரே கன்னக்குழி அழகி. யுத்தம் செய், மேகா, டார்லிங், எனக்குள் ஒருவன், கத்துக்குட்டி, வில் அம்பு, நவரச திலகம், தர்மதுரை, அச்சமின்றி உள்பட பல படங்களில் நடித்தார். ஒரு நொடியில், கலகலப்பு, முப்பரிமாணம், பொட்டு, சரவணன் இருக்க பயமேன் உள்பட பல படங்களில் நடித்து வருகிறார். சின்ன படங்களில் நடித்து வந்த சிருஷ்டி இப்போது பெரிய ஹீரோக்களுடன் நடிக்க ஆரம்பித்து விட்டார். அதோடு மலையாள சினிமாவிலும் கால் பதிக்கிறார்.
மேஜர் ரவி இயக்கும் 1971 பியாண்ட் பார்ட்ர்ஸ் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இதில் மோகன்லால், அல்லு சிரிஷ், அருண்டாய் சிங் ஆகியோரும் நடிக்கிறார்கள். சிருஷ்டி அல்லு சிரிஷ் ஜோடியாக நடிக்கிறார். மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் படம் தயாராகிறது. மலையாளத்தில் அறிமுகமாவது குறித்து சிருஷ்டி டாங்கே கூறியதாவது:
நான் கடுமையாக போராடி வெற்றி பெற்றிருக்கிறேன். நான்கு படங்கள் வெற்றி பெற்று நானும் இந்த ரேசில் சேர்ந்திருக்கிறேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த வருடம் குறைந்தது பத்துப் படங்களாவது எனக்கு ரிலீஸ் ஆயிடும்.இப்போ நான் இன்னும் சந்தோஷமாக இருக்கிறேன். மோகன்லால் நடிக்கிற படம். மேஜர்ரவி டைரக்ஷன்னு சொன்னாலே உடம்பெல்லாம் சிலிர்க்குது.
மோகன்லால் படத்துல நடிக்கிறோம்ன்னு ஒப்பந்தமான உடனேயே எப்ப அவருடன் நடிப்போம் என்று துடிச்சிட்டு இருந்தேன். நடிக்க ஆரம்பிச்ச உடனேயே ஜாம்பாவானுடன் நடித்த பெருமை எனக்கு. அல்லு சிரிஷுடன் ஜோடியாக நடிக்கிறேன். ராணுவம் சம்மந்தப் பட்ட கதை . நான் தமிழ் பேசும் தமிழ் பெண்ணாக நடிக்கிறேன். 2017 எனக்கு நம்பிக்கை கொடுக்கும் ஆண்டாக அமையும் .என்கிறார் சிருஷ்டி டாங்கே.