Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மலையாள ரீமேக்கில் சத்யராஜ்-வடிவேலு..?

24 ஜன, 2017 - 10:11 IST
எழுத்தின் அளவு:
vadivelu-in-the-remake-of-the-movie-Kattappanayile-HrithikRoshan

மலையாளத்தில் சூப்பர்ஹிட்டான பல படங்கள் இங்கே தமிழில் ரீமேக்காகும்போது அதில் உள்ள காமெடி கேரக்டர்களில் தவறாமல் இடம்பெற்று வந்தவர்தான் வடிவேலு.. சத்யராஜும் அதுபோல பல மலையாள ரீமேக் படங்களில் நடித்து ஹிட் கொடுத்தவர்தான். தற்போது இவர்கள் இருவரும் மலையாள ரீமேக் ஒன்றில் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் மலையாள திரையுலகில் நடிகர் திலீப் தயாரிப்பில் உருவான 'கட்டப்பனையிலே ரித்விக்ரோஷன்' என்கிற படம் வெளியானது.. 'அமர் அக்பர் அந்தோணி' என்கிற படத்தை இயக்கிய நாதிர்ஷா என்பவர்தான் இந்தப்படத்தை இயக்கியிருந்தார். இந்தப்படத்தின் கதாசிரியர்களில் ஒருவரான விஷ்ணு உன்னிகிருஷ்ணன் தான் படத்தின் கதாநாயகனாக நடித்திருந்தார்.. சுமாரான தோற்றம் கொண்ட இளைஞன் சினிமாவில் எப்படி ஜெயிக்கிறான் என்பதுதான் கதை. கிட்டத்தட்ட நூறாவது நாளை நெருங்கி ஓடிக்கொண்டு இருக்கும் இந்தப்படத்தின் தமிழ் ரீமேக்கில் தான் சத்யராஜும் வடிவேலும் இணைந்து நடிக்க இருக்கிறார்களாம்.


மலையாளத்தில் இந்தப்படத்தை இயக்கிய நாதிர்ஷாவே இதை தமிழிலும் இயக்க இருக்கிறாராம். அதேபோல் தான் மலையாள நடிகர் திலீப்பே தமிழிலும் இந்தப்படத்தை தயாரிக்கிறாராம். கதாநாயகனும் அதே விஷ்ணு உன்னிகிருஷ்ணன் தானாம். இதில் கதாநாயகனின் தந்தையாக நிறைவேறாத சினிமா கனவுகளை மகன் மூலம் நிறைவேற்ற துடிக்கும் தந்தையாக சித்திக் நடித்த கதாபாத்திரத்தில் தான் சத்யராஜ் நடிப்பார் என்று தெரிகிறது. சத்யராஜின் நண்பனாக, சலீம் குமார் நடித்த கேரக்டரிலோ அல்லது விஷ்ணு உன்னிகிருஷ்ணனின் நண்பனாக நடித்த தர்மஜன் கேரக்டரிலோ வடிவேலு நடிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in