கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
ஏ.எம்.ரத்னத்தின் சூர்யா மூவீஸ் தயாரித்து வரும் படம் கருப்பன். ரேனிகுண்டா படத்தை இயக்கிய பன்னீர் செல்வம் இயக்கும் இந்த படத்தில் விஜயசேதுபதி நாயகனாக நடித்து வருகிறார். றெக்கை படத்தை அடுத்து இந்த படத்திலும் விஜய சேதுபதிக்கு ஜோடியாக லட்சுமிமேனன் கமிட்டாகியிருந்தார். இந்த படத்திற்காக தனது உடம்பையும் ஓரளவு ஸ்லிம் பண்ணி வந்தார். தற்போது, கருப்பன் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.
ஆனால், விஜயசேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட்டு வரும் நிலையில், லட்சுமிமேனன் அப்படத்தில் இருந்து விலகி விட்டதாக கூறுகிறார்கள். அதுகுறித்து விசாரித்தபோது, ஒரு விபத்தில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாம். அதற்கான சிகிச்சையில் அவர் ஈடுபட்டிருப்பதால் இப்போதைக்கு அவரால் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருப்ப தாக சொல்கிறார்கள். அந்தவகையில், லட்சுமிமேனன் பூரண குணமடைந்து வருவதற்கு சில மாதங்கள் ஆகலாம் என்பதால் கருப்பன் படத்திற்கு தற்போது புதிய நாயகி தேர்வு நடந்து வருகிறது.
மேலும், கருப்பன் படத்தில் விஜயசேதுபதியுடன் நடிக்க ஏற்கனவே கீர்த்தி சுரேஷ், ரித்திகா சிங் ஆகிய நடிகைகளிடம் கால்சீட் கேட்கப்பட்டு அவர்களின் கால்சீட் கிடைக்காமல் போகவே லட்சுமிமேனனை ஒப்பந்தம் செய்தனர். ஆனால் இப்போது அவரும் விபத்து காரணமாக அப்படத்தில் இருந்து விலகிவிட்டார்.