ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தெலுங்கு திரை உலகின் பவர் ஸ்டார் நடிகர் பவன் கல்யாண் நடித்து வரும் கட்டமராய்டு படத்தின் டீசர் ஜனவரி 26ல் திரைக்கு வரும் என தயாரிப்பு நிறுவனத்தார் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. பொங்கலுக்கு வெளிவந்த இப்படத்தின் பஸ்ட் லுக் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள நிலையில் ரசிகர்கள் இப்படத்தின் டீசரை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் தற்போது ஜனவரி 26ல் கட்டமராய்டு டீசர் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அறிவித்தபடி ஜனவரி 26ல் கட்டமராய்டு டீசர் வெளியாகவில்லை விரைவில் டீசர் வெளியீட்டு தேதி அறிவிகப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆவலுடன் டீசரை எதிர்பார்த்த ரசிகர்களை இத்தகவல் ஏமாற்றம் அடையச் செய்துள்ளது. ஷ்ருதிஹாசன் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடித்துள்ள இப்படம் தமிழில் வெளிவந்த வீரம் படத்தின் தெலுங்கு ரீமேக்காகும். இயக்குனர் டாலி இயக்கும் இப்படத்தை தயாரிப்பாளர் சரத் மாரர் தனது நார்த் ஸ்டார் என்டர்டையின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கின்றார்.