சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
தமிழ்நாட்டில் தீவிரமடைந்து வரும் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் வீரியம் கடந்த இரண்டு நாட்களாகத்தான் மற்ற மாநிலங்களில் உள்ள திரையுலக பிரபலங்களையும் கவனிக்கவும் யோசிக்கவும் வைத்திருக்கிறது. நம் ஊர் நடிகர்கள் கூட பலரும் வெளிப்படையாக ஜல்லிக்கட்டுக்கான ஆதரவை தெரிவிக்காத நிலையில் மலையாளத்தில் இருந்து மெகாஸ்டார் மம்முட்டி மாணவர்களின் போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மலையாள காமெடி நடிகர் அசு வர்கீஸ் மற்றும் இளம் இயக்குனர் வினீத் சீனிவாசன் ஆகியோர் இளைஞர்களின் எழுச்சி போராட்டத்துக்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்..
இவர்கள் இருவராவது மலையாள சினிமாவில் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். ஆனால் இந்த இருவர் டீமுக்கு மிக நெருக்கமான நண்பரான முன்னணி நடிகர் நிவின்பாலி தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார்.. ஆனாலும் இதுநாள் வரை மௌனம் காத்து வந்தவர், தற்போது ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.. இது குறித்த அவரது முகநூல் பதிவில், “ஒன்றுபட்டால் நிற்போம் பிளவுபட்டால் வீழ்வோம்.. மெரினாவில் திரண்டுள்ள இளைஞர்களின் கூட்டத்தை பார்க்கும்போது அது ஆயுத எழுத்தை எனக்கு ஞாபகப்படுத்துகிறது. உங்களது போராட்டத்திற்கு நல்ல தீர்வு கிடைக்க வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டுள்ளார்.