சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
மும்பையில் இருந்து கோலிவுட்டுக்கு இறக்குமதியாகியுள்ள நடிகை குஷி. சில நடிகைள் மாதிரி ஹோட்டலில் முகாமிட்டபடி படங்களுக்காக முயற்சி எடுக்காமல் சென்னையிலேயே வீடு பிடித்து குடியேறி கிட்டத்தட்ட 6 மாதங்கள் போராடி மன்மதப்பார்வைகள் என்றொரு படத்தில் நடித்திருக்கிறார் இந்த குஷி.
மேலும், இந்த படத்தில் ஓரளவு கவர்ச்சிகரமான வேடத்தில் நடித்திருப்பதாக கூறும் அவர், சமூகத்துக்கு ஒரு நல்ல விசயத்தை சொல்வதற்காகவே அந்த மாதிரியான ஒரு வேடத்தில நடித்தேன். ஆனபோதும் நான் ஆடை விசயத்தில் லிமிட் தாண்டவில்லை. அடுத்தபடியாக ஹோம்லியாக நடிக்கவே ஆசைப்படுகிறேன். அதற்காக சில டைரக்டர்களிடம் கதை கேட்டுள்ளேன். அந்த வகையில், முதல் படம் என்மீது கிளாமர் முத்திரையை திணித்தாலும், அடுத்தபடியாக அந்த இமேஜை மாற்றும் வகையில் நான் நடிக்கும் படங்கள் வெளியாகும் என்று கூறும் குஷி, இளவட்ட நாயகியாகத்தான் நடிப்பேன் என்றில்லாமல், மெச்சூரிட்டியான வேடங்களில் நடிக்கவும் தயாராக இருக்கிறேன் என்கிறார்.