600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகன் சோனம் கபூர். இவரது மகன் ஹர்ஷவர்தன் கபூர். கடந்தாண்டு வெளிவந்த ‛மிர்ஷியா' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவினாலும் ஹர்ஷவர்தனுக்கு அறிமுக நடிகருக்கான இரண்டு, மூன்று விருதுகள் கிடைத்தன. மிர்சியா படம் பிலிம்பேர் விருது நிகழ்ச்சியிலும் பங்கேற்றது. ஆனால் இதில் அறிமுக நடிகருக்கான விருது அவருக்கு கிடைக்கவில்லை. இதனால் பிலிம்பேர் தேர்வு குழு மீது அதிருப்தியில் இருக்கிறார் ஹர்ஷவர்தன்.
இதுப்பற்றி அவர் ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது... ‛‛நான் அறிமுக நடிகருக்காக இரண்டு விருதுகளை பெற்றுள்ளேன். இந்தாண்டு எனக்கு பிலிம்பேர் கிடைக்கும் என்று நம்பிக்கை கொண்டிருந்தேன். ஒவ்வொரு விருதுக்கும் ஒரு அளவுகோல் உள்ளது. அறிமுக விருது முதன்முதலாக அறிமுகமாகும் நடிர்களுக்கு கொடுக்க வேண்டும், பிறமொழிகளில் அதிகப்படங்களில் நடித்தவர்களுக்கு அல்ல'' என்று கூறியுள்ளார்.
பிலிம்பேரில் அறிமுக நடிகருக்கான விருது ‛உத்தா பஞ்சாப்' படத்திற்காக தில்ஜித் தோசனுக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.