ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டம் தமிழகத்தில் தீவிரமாகி உள்ள நிலையில் நடிகர்கள் பலரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். துருவநட்சத்திரம் படத்திற்காக வெளிநாட்டில் ஷூட்டிங்கில் இருக்கும் விக்ரம், அங்கிருந்தபடி தனது ஆதரவை தெரிவித்திருக்கிறார். அவர் விடுத்துள்ள செய்தியில், ''தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பது எனது ஆசை, எண்ணம். அதற்காக தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தும் அனைத்து தமிழர்களுக்கும் குறிப்பாக மாணவ, மாணவியருக்கும் எனது நெஞ்சார்ந்த முழு ஆதரவு உண்டு. இந்த போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும் என்பதில் எந்தவித சந்தோகமும் இல்லை'' என்று கூறியுள்ளார்.