‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
வேலையின்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கத்திச்சண்டை படங்களுக்குப்பிறகு எஸ்-3, சரவணன் இருக்க பயமேன், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும், பொதுவாக என்மனசு தங்கம், வெண்ணிலாக கபடிக்குழு-2, தொண்டன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் சூரி. இதில், தொண்டன் தவிர மற்ற படங்களில் கிட்டத்தட்ட இன்னொரு ஹீரோ என்று சொல்லும் அளவுக்கு முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். மேலும், இந்த படங்கள் அனைத்திலுமே தனது மதுரை தமிழ் பேசியே வழக்கம்போல் நடித்திருக்கிறார்.
இந்நிலையில், தற்போது வாலுப்பட டைரக்டர் விஜயசந்தர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தில் கமிட்டாகியிருக்கிறார் சூரி. வடசென்னை கதையில் உருவாகும் இந்த படத்தில் படம் முழுக்க விக்ரமுடன் வரும் காமெடியனாக நடிக்கிறார். மேலும், விஜய்யுடன் வேலாயுதம், ஜில்லா, அஜீத்துடன் வேதாளம், சூர்யாவுடன் அஞ்சான், எஸ்-3 என முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்ட சூரி, விக்ரமுடன் இந்த படத்தில்தான் முதன்முறையாக இணைந்து நடிக்கப்போகிறார். அதுவும் சென்னை தமிழ் பேசி நடிக்கிறார் சூரி.