'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடந்த வாரம் 14-1-17 அன்று வெளியான 'கோடிட்ட இடங்களை நிரப்புக' படம் பார்த்தினுக்கு ரசிகர்களிடம் இருந்த கொஞ்சநஞ்ச பேரையும் காலி பண்ணிவிட்டது. இளைஞர்களின் ரசனைக்கு தீனி போடுவதாக நினைத்துக் கொண்டு மலிவான படத்தைக் கொடுத்துவிட்டார் என்று பார்த்திபன் மீது கடும் விமர்சனக்கணைகள் பாய்ந்து கொண்டிருக்கின்றன. அதைப் பற்றி கவலைப்படாமல், தனது அடுத்த படம் குறித்து அறிவிப்பு செய்துள்ளார் பார்த்திபன்.
தன்னுடைய படங்களுக்கு வித்தியாசமான தலைப்புகளை வைப்பதை வழக்கமாக் கொண்டிருக்கும் பார்த்திபன் அடுத்து இயக்கவிருக்கும் படத்திற்கு 'முன்பதிவாய் ஒரு முத்தம்' என்று தலைப்பு வைத்துள்ளார். கோடிட்ட இடங்களை நிரப்புக என்ற கவிதைத்தனமான தலைப்பிலேயே இப்படி மலிவான படத்தைக் கொடுத்தவர் முன்பதிவாய் ஒரு முத்தம் என்ற தலைப்பில் என்ன மாதிரியான படத்தை எடுக்கப்போகிறாரோ என்ற கலக்கம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.
இந்தப் படத்தை வருகிற தமிழ் புத்தாண்டு (ஏப்ரல்-14) அன்று வெளியிட முடிவு செய்துள்ளார் பார்த்திபன். இந்த படத்திற்கான நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வில் ஈடுபட்டுள்ள பார்த்திபன், ஒரு சில நாட்களில் இப்படத்தில் யார் யார் நடிக்கிறார்கள், தொழில்நுட்ப கலைஞர்களாக யாரெல்லம் பணியாற்றவிருக்கிறார்கள் என்பது குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட உள்ளாராம்.