டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தல அஜித் நடிப்பில் வெற்றி பெற்ற வீரம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான கட்டமராய்டு படத்தில் தெலுங்கு திரை உலகின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நாயகனாக நடித்து வருகின்றார். கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக் சிரஞ்சீவி நடிப்பில் கைதி நம்பர் 150ஆக வசூலில் சக்கை போடு போட்டு வருகின்றது. இதனைத் தொடர்ந்து வீரம் திரைப்படம் தெலுங்கில் கட்டமராய்டு என்ற பெயரில் தயாராகி வருகின்றது. கட்டமராய்டு படத்திற்கு பின்னர் தல அஜித்தின் மற்றொரு வெற்றித் திரைப்படமான வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் நடிக்கவுள்ளாராம். கட்டமராய்டு படத்தில் ஷ்ருதிஹாசனுடன் நடித்து வரும் பவன் கல்யாண் அப்படத்தின் படப்பிடிப்புகளை விரைந்து முடிக்க இயக்குனர் டோலியிடம் கூறியுள்ளாராம் காரணம் அடுத்த படத்தின் படப்பிடிப்பை மார்ச் மாதத்தில் துவங்க பவன் கல்யாண் திட்டமிட்டுள்ளாராம். அதற்கான தொழில் நுட்ப கலைக்னருக்கான தேர்விலும் பவன் கல்யாண் தற்போது கவனம் செலுத்தி வருகின்றாராம்.