ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பிரபல மலையாள சேனலான மனோரமா நியூஸ், ஒவ்வொரு வருடமும் அதிகமாக செய்திகளில் அடிபட்டவர்கள், மீடியாவிற்கு அதிகம் தீனி போட்டவர்கள் என்கிற வகையில் பல பிரபலங்களை நேயர்கள் மூலமாக பட்டியலிட்டு அதில் வெவ்வேறு துறைய சேர்ந்த சிலரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு நியூஸ் மேக்கர் என்கிற விருதை வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த 2015ஆம் ஆண்டுக்கான சினிமா துறைக்கான நியூஸ் மேக்கர் விருது மஞ்சு வாரியருக்கு வழங்கப்பட்டது.. மஞ்சுவின் சினிமா ரீ என்ட்ரி, கணவர் திலீப்புடனான விவாகரத்து வழக்கு என வருடம் முழுதும் செய்திகளில் இடம்பிடித்ததால் அவருக்கு அந்த வருடத்திற்கான நியூஸ் மேக்கர் விருது வழங்கப்பட்டதாக கூறப்பட்டது.
அதேபோல கடந்த 2016ல் அதிகம் செய்திகளில் இடம்பிடித்தவர் என்கிற வகையில் நியூஸ்மேக்கர் விருது மோகன்லாலுக்கு வழங்கப்படுவதாக மனோரமா நியூஸ் அறிவித்துள்ளது.. கடந்த வருடம் ஆரம்ப மாதங்களில் மோகன்லால் பற்றிய செய்திகள் அதிகம் இல்லாவிட்டாலும் கூட, போகப்போக அவரது தெலுங்கு சினிமா பிரவேசம், ஜூனியர் என்.டி.ஆர் படத்தில் நடித்தது, கண்பார்வையற்றவராக ஒப்பம் படத்தில் நடித்தது, புலியுடன் மோதும் புலி முருகன் படத்தில் நடித்தது, அவரது மூன்று படங்களும் நூறு கோடிகளை தாண்டி வசூலித்தது என உலகம் முழுக்க உள்ள மலையாள ரசிகர்கள் அதிகம் வாசித்தது மோகன்லால் பற்றிய செய்திகளைத்தான் என்பது சர்வேயில் தெரியவந்துள்ளது. அதனால் தான் அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது