ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ரோமியோ ஜூலியட் இயக்குனர் லட்சுமண் இயக்கத்தில் மீண்டும் போகன் படத்தில் நடித்துள்ள ஜெயம்ரவி, மிருதன் படத்தை அடுத்து மீண்டும் சக்தி செளந்தரராஜன் இயக்கத்தில் டிக் டிக் டிக் படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக ஒருநாள்கூத்து படநாயகி நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். ஏ.எல்.விஜய் இயக்கி வரும் வனமகன் படத்தில் நடித்துக்கொண்டே இந்த படத்திலும் நடிக்கிறார் ஜெயம்ரவி.
மேலும், இந்த டிக் டிக் டிக் படப்பிடிப்பு ஜனவரி மாதமே நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அதிரடியான பேய் கதையில் உருவாகும் இந்த படத்திற்கான செட் போடும் பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் படப்பிடிப்பு மாற்றி வைக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 23-ந்தேதி முதல் சென்னையில் அப்படத்திற்கான செட் போடும் வேலைகள் இரவுபகலாக தொடங்கயிருக்கிறது. மேலும், மிருதன் படத்தை வித்தியாசமான கதையில் படமாக்கிய சக்தி செளந்திரராஜன் இந்த படத்தை வழக்கமான பேய் படமாக இல்லாமல் மாறுபட்ட பேய் கதையில் இயக்குகிறாராம்.