‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
சிங்கம், சிங்கம்-2 படங்களைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எஸ்-3 படத்திலும் அனுஷ்கா, விஜயகுமார், ராதாரவி, நாசர், யுவராணி, சுமித்ரா என முந்தைய படங்களில் நடித்துள்ள நடிகர்- நடிகைகள் தொடர்ந்து நடித்துள்ளனர். மற்றபடி இரண்டாவது நாயகியாக சிங்கம்-2வில் ஹன்சிகா நடித்த நிலையில், தற்போது சிங்கம்-3யில் சூர்யாவின் ஜோடியாக ஏற்கனவே நடித்த அனுஷ்காவே நடிக்க, இன்னொரு நாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார்.
மேலும், முந்தைய பாகங்களில் கதாநாயகியாக அனுஷ்காவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுவந்த நிலையில், சிங்கம்-3யில் ஸ்ருதிஹாசனுக்கு முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஆக்சன் ஹீரோயின் ரேஞ்சுக்கு நடித்திருக்கிறாராம். அனுஷ்காவைப் பொறுத்தவரை முந்தைய பாகங்களில் சூர்யாவை காதலித்து வந்தார். அவர்களது திருமணம் முடிவு செய்து வைக்கப்பட்டிருந்தது. அதனால் இந்த பாகத்தில் அவர்களுக்கு திருமணம் நடைபெறுகிறதாம். ஆக, சூர்யாவின் காதலியாக நடித்து வந்த அனுஷ்கா இந்த பாகத்தில் மனைவியாக பிரமோஷன் பெற்றுள்ளாராம்.