இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
அங்காடித்தெரு, கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம், வேல்முருகன் போர் வெல்ஸ் உள்பட சில படங்களில் நடித்தவர் மகேஷ். மலையாளத்தில் லாஸ்ட் பெஞ்ச் என்ற படத்திலும் நடித்தார். ஆனபோதும், அங்காடித்தெருவுக்குப்பிறகு அவர் நடித்த படங்கள் எதுவும் வெற்றி பெறாததால் மார்க்கெட்டில் பின்தங்கியே இருக்கிறார் மகேஷ். இந்நிலையில், தற்போது தெலுங்கில் வீராஞ்சனம் என்றொரு படத்தில் நடித்துள்ளார் மகேஷ்.
அந்த படம் குறித்து அவர் கூறும்போது, வீராஞ்சனம் படத்தில் ஒரியா நடிகர் ஒருவருடன் இணைந்து நடித்திருக்கிறேன். காதலை மையமாகக்கொண்ட அந்த படம் ஜனரஞ்சகமாக படமாக்கப்பட்டிருக்கிறது. அடுத்தமாதம் திரைக்கு வரும் வீராஞ்சனம் ஹிட்டாக அமைந்து தெலுங்கில் எனக்கு புதிய படங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்கிறார். மேலும், அடுத்து தமிழில் சுப்பிரமணிய பாரதி என்றொரு புதுமுக இயக்குனர் இயக்கும் படத்தில் நடிக்கிறேன். விரைவில் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது என்கிறார் மகேஷ்.