ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிருத்விராஜ் நடிப்பில் புதியவரான கே.ஜெய் என்பவர் இயக்கியுள்ள படம் தான் 'எஸ்றா'. இது நூறு சதவீதம் திகிலுக்கு கியாரண்டி தரும் அக்மார்க் ஹாரர் படம்.. முதல்முறையாக பிருத்விராஜுடன் இணைந்து நடிக்கிறார் என்பதுடன் மலையாளத்திலும் முதன்முறையாக இந்தப்படத்தின் மூலம் தான் காலடி எடுத்து வைத்துள்ளார் பிரியா ஆனந்த். அதுமட்டுமல்ல தமிழ், மலையாளம் என இருமொழிப்படமாக இது உருவாகியுள்ளது. கடந்த வருடம் கிறிஸ்துமஸ் ரிலீஸாக டிச-23ஆம் தேதி இந்தப்படத்தை வெளியிட தீர்மானித்திருந்தார்கள்.
ஆனால் கிறிஸ்துமஸ்க்கு முன்பே ஆரம்பித்த கேரளா தயாரிப்பாளர்கள்-தியேட்டர் அதிபர்கள் ஸ்ட்ரைக்கால் இந்தப்படத்தின் ரிலீஸ் கேள்விக்குறியானது.. இதை தொடர்ந்து துல்கர், மோகன்லால், ஜெயசூர்யா ஆகியோரின் படங்களும் முடங்கிப்போகின. இப்போது ஸ்ட்ரைக் முடிவுக்கு வந்துள்ள நிலையில் வரும் 19ஆம் தேதி துல்கரின் படமும், 20ஆம் தேதி மோகன்லாலின் படமும் ரிலீசாக இருக்கின்றன.. அதனால் கொஞ்சம் இடைவெளிவிட்டு பிப்-10ல் இந்தப்படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார்கள். இந்தப்படத்தின் தமிழ் ரிலீஸ் எப்போது என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லையாம்.