‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
மணிரத்னம் இயக்கத்தில் தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற ‛ஓ காதல் கண்மணி' படம், ஹிந்தியில் ஓகே ஜானு என்ற பெயரில் ரீ-மேக்காகி கடந்தவாரம் வெளியானது. ஆதித்யா ராய் கபூர், ஸ்ரத்தா கபூர் நடித்திருந்த இப்படத்தை ஷாத் அலி இயக்கியிருந்தார். படம் வெளியான முதல் நாளில் ரூ 4.08 கோடியும், இரண்டவது நாளில் ரூ 4.90 கோடியும், மூன்றாவது நாளில் ரூ 4.82 கோடியும், நேற்று ரூ.2 கோடியும் ஆகமொத்தம் ரூ.15 கோடி வசூலித்து இருக்கிறது. ஓகே ஜானு படம் சுமார் ரூ.30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஆனால் நான்கு நாளில் பாதி தான் வசூலித்திருக்கிறது. படத்தின் வசூல் இனிவரும் நாட்களில் குறையும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த ஆண்டில் தோல்வியடைந்த முதல் படமாக ஓகே ஜானு இருக்கும் என்கிறார்கள்.