ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களில் வருண் தவானும் ஒருவர். தற்போது வருண், இயக்குநரும், தந்தையுமான டேவிட் தவான் இயக்கத்தில் ஜூட்வா படத்தின் இரண்டாம் பாகமான ‛ஜூட்வா-2 படத்தில் நடிக்க இருக்கிறார். வருண் தவான், டாப்சி மற்றும் ஜாக்குலின் ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்கள். சஜித் தயாரிக்கிறார். ‛ஜூட்வா-2 படத்தில் நடிகர் சல்மான்கான், சிறப்பு தோற்றத்தில் நடிக்க போவதாக கூறப்பட்டது. இப்போது, சல்மான்கான் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இதைப்பற்றி பாலிவுட் வட்டாரத்தில் விசாரித்தபோது... ஜூட்வா முதல் பாகத்தில் சல்மான், பிரேம் மற்றும் ராஜ் என்ற ரோலில் நடித்திருந்தார். இரண்டாம் பாகத்திலும் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் முக்கியமாக இருக்கிறதாம், எனவே அவரை அதே ரோலில் நடிக்க வைக்க படக்குழு எண்ணியுள்ளது. சல்மான் மட்டுமல்லாது, ஜூட்வா படத்தில் நடித்த நடிகைகள் கரீஷ்மா கபூரிடமும், ரம்பாவிடமும் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது.
‛ஜூட்வா 2 படம் இந்த ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.