ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகர், இயக்குனர் பாண்டிராஜின் மகன் பிருத்விராஜன். கைவந்தகலை படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானர். முதல்படமே தோல்வி அடைந்தது. அதன் பிறகு நாளைய பொழுது உன்னோடு, வைதேகி, பதினெட்டான்குடி எல்லை ஆரம்பம், படங்களில் நடித்தார் எதுவும் அவருக்கு கைகொடுக்கவில்லை. மகனை வைத்து ஆண்பாவம் 2ம் பாகம் எடுக்கப்போவதாக பாண்டியராஜன் அறிவித்தார். அதுவும் ஆரம்பிக்கவில்லை. இந்த நிலையில் பிருத்விராஜன் நடித்து வரும் படம் காதல் முன்னேற்ற கழகம்.
இது சுப்பிரமணியுரம் பாணியிலான 1980களில் நடக்கும் கதை. சாந்தினி ஹீரோயின். இவர்கள் தவிர சிங்கம்புலி, கஞ்சா கருப்பு, கிஷோர், சரண்யா, உள்பட பலர் நடிக்கிறார்கள். பி.சி.சிவன் இசை அமைக்கிறார், ஹாரிஸ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். ஊட்டி, கடலூர், திட்டக்குடி, விருத்தாச்சலம், பெரம்பலூர் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. மாணிக் சத்யா என்ற புதுமுகம் இயக்கி உள்ளார். ஒரு வெற்றிக்காக ஏங்கும் பிருத்விராஜனுக்கு காதல் முன்னேற்ற கழகம் அதை தரும் என்று நம்புகிறார்.