பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
விண்ணைத் தாண்டி வருவாயா, அழகர் சாமியின் குதிரை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபா் சங்கம், தேசிங்கு ராஜா, மான் கராத்தே, கயல், மாப்பிள்ளை சிங்கம், கொடி படங்களைத் தயாரித்த எஸ்கேப் ஊ்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் தற்போது “எனை நோக்கி பாயும் தோட்டா” வை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம் புதியவர்கள் இணைந்து உருவாக்கியுள்ள முன்னோடி படத்தையும் வாங்கி வெளியிடுகிறது.
ஒருவன் யாரை முன்னோடியாகக் கொண்டு பின்பற்றுகிறானோ அதைப் பொறுத்தே அவனது வாழ்வு உயர்வாகவோ தாழ்வாகவோ அமையும். வாழ்க்கையில் யாரை அல்லது எதை முன்னோடியாக எடுத்துக் கொள்கிறோம் என்பது முக்கியம் என்கிற கருத்தை முன்வைத்து உருவாகியுள்ள படம். கதை, திரைக்கதை, வசனம் எழுதி எஸ்.பி.டி.ஏ.குமார் இயக்கி உள்ளார் . ஹரீஷ், யாமினி பாஸ்கர் என்ற புதுமுகங்கள் நடித்துள்ளனர். ‛கங்காரு படத்தின் நாயகன் அர்ஜுனா, குற்றம் கடிதல் பாவல் நவநீதன் இருவரும் வில்லன்களாக நடிக்கிறார்கள். வினோத் ரத்னசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்., கே.பிரபு ஷங்கர் இசையமைத்துள்ளார். படம் பற்றி வாங்கி வெளியிடும் தயாரிப்பாளா் எஸ்கேப் ஆர்ட்டிஸ் மதன் கூறியதாவது:
நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்கவும், சினிமாவில் நம்மால் யாருக்காவது உதவ முடியுமா என்ற நோக்கோடும் என் தனிப்பட்ட தயாரிப்புகளுக்கு நடுவேயும், சில படங்களைப் பார்த்து வெளியிட்டு வருகிறோம். அதன்படி, “முன்னோடி படத்தையும் பார்க்க நோ்ந்தது. “ரேணிகுண்டா” படத்தைப் போன்ற களத்தில் மிக அழமான கதையுடன் மிரட்டியிருக்கிறார்கள். சமீபத்தில் வெளியிடுவதற்காக நான் பார்த்தது 100 படங்களுக்கு மேல் இருக்கும். அதில் என்னை பாதித்தது “முன்னோடி” . படத்தை நானே வெளியிடுகிறேன் என ஒப்பந்தம் செய்து கொண்டேன். வெளியிட்டு தேதியை விரைவில் அறிவிப்போம் என்றார் மதன்.