ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கேரக்டர் விசயத்தில் அளவுகோல் வைக்காதவர் விஜயசேதுபதி. அதோடு, பாசிட்டீவ், நெகடீவ் என எந்தமாதிரியான வேடம் என்றாலும் களமிறங்கி விடுவார். அந்த வகையில், தற்போது கவண், விக்ரம் வேதா, வடசென்னை, அநீதி கதைகள், 96, கருப்பன் என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், ஏற்கனவே அவர் மெல்லிசை என்ற பெயரில் நடித்து வந்த படம் தற்போது புரியாத புதிர் என்ற பெயரில் ரிலீசாக உள்ளது.
மேலும், இதுவரை பலதரப்பட்ட வேடங்களில் நடித்துள்ள விஜயசேதுபதி இந்த படத்தில் சைக்கோ திரில்லர் கதையில் நடித்திருக்கிறார். அந்தவகையில், சைக்கோவாக நடித்திருக்கும் அவர், மற்ற ஹீரோக்கள் செய்யத்துணியாத சில அதிரடியான காட்சிகளிலும் நடித்திருக்கிறாராம். அதேசமயம், இப்படத்தில் கமர்சியல் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் குறைவாக இருந்ததாம். அதனால் மெல்லிசை என்ற டைட்டீலை புரியாத புதிராக மாற்றியபோது, விஜயசேதுபதியை வைத்து சில கமர்சியல் காட்சிகளையும் படமாக்கி படத்தில் இணைத்திருக்கிறார்களாம்.