வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் |
கன்னட, மலையாள படங்களில் நடித்து வந்த நிக்கி கல்ராணி, தமிழில் ஆதி நடித்த யாகவராயினும் நாகாக்க படத்தில்தான் கமிட்டாகி நடித்தார். ஆனால் அந்த படம் வெளியாக தாமதமானதால் அதன்பிறகு ஜி.வி.பிரகாசுடன் அவர் நடித்த டார்லிங் படம் முதலில் திரைக்கு வந்தது. அப்படி வெளியான அந்த ஹாரர் படம் ஹிட்டாக அமைந்தால் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டானார் நிக்கி கல்ராணி. தற்போது மொட்ட சிவா கெட்ட சிவா, நெருப்புடா, கீ, மரகத நாண யம், ஹர ஹர மகா தேவகி என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
இதில், யாகவராயினும் நாகாக்க படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஆதியுடன் நடிக்கும் மரகத நாணயம் படத்தில் டார்லிங் படத்தில் நடித்தது போன்று பேயாக நடித்து வருகிறார் நிக்கி கல்ராணி. அந்த படத்தில் அதிரடி பேயாக நடித்தவர் இந்த படத்திலும் அதிரடியாக நடிப்பதோடு, ஒரு சண்டை காட்சியிலும் நடித் துள்ளாராம். அந்த வகையில், தான் பேயாக நடித்த டார்லிங் படம் ஹிட்டடித்தது போன்று இந்த படமும் மெகா ஹிட்டாக அமையும் என்று எதிர்பார்க்கிறார் நிக்கி கல்ராணி.