தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரபல நடிகர் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜூன். பூபதி பாண்டியன் இயக்கத்தில் விஷால் நடித்த பட்டத்து யானை படத்தில் நாயகியாக அறிமுகமானார். ஆனால் அதன்பிறகு ஐஸ்வர்யா அர்ஜூனுக்கு புதிய படங்கள் புக்காகவில்லை. அதையடுத்து அவர் ஒரு இந்தி படத்தில் நடிக்கயிருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் அது நடக்கவில்லை. இந்தநிலையில், தற்போது தனது மகளை வைத்து காதலின் பொன்வீதியில் -என்ற படத்தை தானே தயாரித்து இயக்கி வருகிறார் அர்ஜூன். தமிழ், கன்னடத்தில் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
மேலும், இந்த படத்தில் பணியாற்றுபவர்கள் ஐஸ்வர்யா, பெரிய நடிகரின் மகள் என்பதால் படப்பிடிப்பு தளத்தில் பந்தா பண்ணுவார். பயங்கரமாக பேசுவார் என்றுதான் நினைத்தார்களாம். ஆனால் அவரோ மிக மிக எளிமையாக அனைவரிடமும் பேசி பழகினாராம். ஸ்பாட்டிற்கு வந்ததும் அனைவருக்கும் வணக்கம் சொல்பவர் படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பும்போது வணக்கம் சொல்லிவிட்டுத்தான் செல்கிறாராம். அதோடு, கேரவனுக்குள் அமர்ந்து சாப்பிடாமல் படத்தில் பணியாற்றும் டெக்னீசியன்கள் வெளியில் அமர்ந்து சாப்பிடும் இடத்தில்தான் தானும் அமர்ந்து சாப்பிட்டாராம். அந்த அளவுக்கு அனைவரும் ஆச்சர்யப்படும் வகையில் எளிமையாக நடந்து கொள்கிறாராம் ஐஸ்வர்யா அர்ஜூன்.