இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் தங்கை மஞ்சுளா, தெலுங்கு திரைப்படம் ஒன்றில் இயக்குனர் அவதாரம் எடுக்கவுள்ளார். சந்தீப் கிஷான் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் சாய் பல்லவி நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளாராம். இயக்குனர் சேகர் கம்முல்லா இயக்கத்தில் வருண் தேஜிற்கு ஜோடியாக ஃபிடா எனும் தெலுங்கு படத்தில் நடித்து வரும் சாய் பல்லவிடம் அப்படத்திற்கு பின்னர் மஞ்சுளா இயக்கும் படத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகின்றதாம். படத்தின் கதையைக்கேட்டு சாய்பல்லவிக்கு பிடித்துப்போக இப்படத்தில் நடிக்க அவரும் விருப்பம் தெரிவித்துள்ளாராம். தயாரிப்பாளர் ஜெமினி கிரண் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் மாதவன் வசனம் எழுதவுள்ளார். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. பிப்ரவரியில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.