‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
தாய் பகை குட்டி உறவு என்று கிராமப்புறங்களில் சொல்வார்கள். கவிஞர் வைரமுத்து, யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியைப் பார்த்தால் இப்படித்தான் சொல்லத்தோன்றுகிறது. இளையராஜாவுக்கும் வைரமுத்துவுக்கும் ஆகாது என்பது உலகறிந்த விவகாரம். இந்நிலையில், சீனுராமசாமி இயக்கிய 'இடம் பொருள் ஏவல்' படத்தில் கவிஞர் வைரமுத்துவும், யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து பணியாற்றினார்கள்.
பின்னர் மீண்டும் சீனுராமசாமி இயக்கிய 'தர்மதுரை' படத்திலும் இருவரும் இணைந்து பணியாற்றினர். 'இடம் பொருள் ஏவல்' படம் இன்னும் வெளியாகவில்லை. 'தர்மதுரை' படம் வெற்றி பெற்றது. இந்நிலையில் 'தர்மதுரை' படத்தை தொடர்ந்து கவிஞர் வைரமுத்துவும், யுவன் ஷங்கர் ராஜாவும் அமீர் இயக்கும் 'சந்தனத்தேவன்' படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர். இந்த படத்திற்காக வைரமுத்துவின் வரிகளில் 3 பாடல்கள் உருவாகிவிட்டனவாம்.