தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரபல பாலிவுட் இளம் நடிகைகளில் அனுஷ்கா சர்மாவும் ஒருவர். வித்தியாசமாக நடிப்பின் மூலம் ஒவ்வொரு படத்திலும் ரசிகர்களிடத்தில் பாராட்டை பெற்று வருகிறார் அனுஷ்கா. சமீபத்தில் அவர் நடித்த சுல்தான் படத்தில் இருந்து அனுஷ்காவின் நடிப்பு அடுத்த கட்டத்தை அடைந்தது. நடிகர் ஹிருத்திக் ரோஷன் சூப்பர் ஹீரோவாக நடித்து வெளியான கிரிஷ் படங்களின் வரிசையில் கிரிஷ்-4 படம் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. சில தினங்களுக்கு முன் இப்படத்தில் அனுஷ்கா சர்மா சூப்பர் உமனாக நடிக்க அவரிடம் கேட்டதாக தகவல்கள் வெளியாகின. இது அபத்தமான செய்தி என்று கூறி மறுத்துவிட்டார் அனுஷ்கா.
இதைப்பற்றி மேலும் அனுஷ்கா கூறியதாவது..... "கிரிஷ் -4 படத்தில் நான் நடிக்கவில்லை. அந்த படக்குழுவும் என்னிடம் இதைப்பற்றி எதுவும் பேசவில்லை. அவ்வாறு இருக்க இப்படத்தில் நான் நடிக்கிறேன் என்று யார் செய்திகளை பரப்புகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. இவ்வாறு நாங்கள் அறியாத செய்திகளை அவர்கள் போடுவதும் அதற்கு ஒவ்வொரு முறையும் விளக்கம் கூறுவதே எங்களுக்கு வேலையாக இருக்கிறது." என்று கவலையுடன் பேசினார்
தற்போது அனுஷ்கா இயக்குநர் இம்தியாஸ் அலி இயக்கவிறுக்கும் படத்தில் நடிக்கயிருக்கிறார். பெயரிட படாத இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு தெரிவித்து இருக்கிறது.